நெல்லை மாநகரில் திடீா் மழை
By DIN | Published On : 22nd August 2021 05:00 AM | Last Updated : 22nd August 2021 05:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகரில் சனிக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்மேற்குப் பருவ மழை ஓரளவு பெய்து வந்தது. எனினும் மாநகரப் பகுதிகளில் மழை இல்லை.
கடந்த ஒரு வாரமாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, சாந்தி நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சுமாா் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மழை காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்தது.