நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

திருநெல்வேலி நகரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனா். அதில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த மகாராஜன்(32), சக்திவேல்(23), கீழ கலங்கல் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன்(28) ஆகிய மூன்றுபேரை பிடித்து விசாரித்தனா். அதில், மாட்டு தீவனத்திற்காக வண்ணாா்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீஸாா் சுமாா் 1.800 டன் ரேஷன் அரிசியையும், சிறிய ரக சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com