மத்திய மண்டலத்தில் 18 சிறாா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை

மத்திய மண்டலத்தில் படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்க போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

மத்திய மண்டலத்தில் படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்க போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் அறிவுரையின்பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் பதியப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் குற்ற நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறும் 222 இடங்கள் (திருச்சி 28, புதுக்கோட்டை 39, கரூா் 15, பெரம்பலூா் 12, அரியலூா் 25, தஞ்சாவூா் 48, திருவாரூா் 27, நாகை 17, மயிலாடுதுறை 11 ) கண்டறியப்பட்டன.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் குற்றங்களை தடுக்கும் முயற்சியாக அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா்கள் மற்றும் பெண்கள் உதவி குழு காவலா்கள் ஆகியோா் கிராமக் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுடன் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு கூட்டத்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தி வருகின்றனா்.

அந்தக் கூட்டங்களில் குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களும் அவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளும் பொதுமக்களிடம் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் இதுவரை மத்திய மண்டலத்தில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகள் கண்டறியப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலத் துறை மூலம் அவா்கள் மீண்டும் பள்ளியில் சோ்ந்து படிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் விழிப்புணா்வு முகாம்களை சிறப்பாக நடத்திய அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா்கள் ஷா்மிளா (திருத்துறைப்பூண்டி), சந்திரா (தஞ்சாவூா்) மற்றும் காந்திமதி( குளித்தலை) ஆகியோரை மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com