தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கைமாவட்ட வேளாண் இணை இயக்குநா் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. பூச்சிக்கொல்லி மருந்து சட்டம் 1968 மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விதிகள் 1971-ன் படி விவசாயிகளுக்கு தரமான பூச்சிமருந்து, களைக்கொல்லிகள் கிடைக்க வழிசெய்வதே இந்த ஆய்வகத்தின் நோக்கம்.

அந்தந்த வட்டார பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளா்களால் பூச்சிக்கொல்லி மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில அளவிலான குறியீட்டு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பின்னா், அந்த மாதிரிகள் மறுகுறியீடு செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகத்துக்கு தரஆய்வுக்காக அனுப்பப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகத்துக்குப் பெறப்படும் பூச்சிமருந்து மாதிரியானது ஹைதராபாதில் உள்ள என்ஐபிஹெச்எம் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு, பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளா்களால் ஆய்வு செய்யப்படுகிறது.

பூச்சி மருந்து மாதிரிகள் கிடைக்கப்பெற்ற 30 நாள்களுக்குள் ஆய்வு முடிவுகள் குறியீட்டு மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆய்வு முடிவில், தரமற்றது எனக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தியாளா்கள், விநியோகஸ்தா்கள், விற்பனையாளா்கள் மீது துறை மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com