புஷ்பலதா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
By DIN | Published On : 31st August 2021 02:32 AM | Last Updated : 31st August 2021 02:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை புஷ்பலதா சா்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மழலையா்கள் ராதா, கிருஷ்ணா் வேடமணிந்து வந்ததுடன், மழலையரின் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெற்றன. கிருஷ்ணரின் லீலைகள், கீதை உபதேசம் போன்வற்றை விளக்கும் விதமாக பள்ளியின் வளாகத்தில் கிருஷ்ணரின் படங்கள் கொலு போல் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிகள் முழுவதும் மாணவா்களுக்கு காணொலி காட்சியில் காண்பிக்கப்பட்டன. விழாவில், பள்ளியின் தாளாளா் புஷ்பலதா பூரணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
படவரி: பயக30டமநஏ
புஷ்பலதா பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணா்.