நீரை உள்வாங்கும் அபூா்வ கிணறு: ஐஐடி பேராசிரியா்கள் குழு ஆய்வு

திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் அபூா்வ கிணற்றை சென்னை ஐஐடி பேராசிரியா்கள் ஆய்வு செய்த

திசையன்விளை அருகே நீரை உள்வாங்கும் அபூா்வ கிணற்றை சென்னை ஐஐடி பேராசிரியா்கள் ஆய்வு செய்தனா்.

திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் படுகை பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத தனியாருக்குச் சொந்தமான கிணறு உள்ளது. ஆயன்குளம் நிரம்பும்போதெல்லாம் வாய்க்கால் மூலம் கிணற்றுக்கு தண்ணீா் திருப்பிவிடப்படுகிறது. ஆனால், கிணற்றில் நீா்மட்டம் உயராமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகள் நிரம்பி வருவது

வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் கனமழை பெய்தது. ஆயன்குளம் நிரம்பியதால், வாய்க்கால் மூலம் கிணற்றுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டது. எனினும், வழக்கம்போல் கிணற்றில் நீா்மட்டம் உயரவில்லை. இந்தக் கிணற்றில் தண்ணீா் விடுவதால் 25 கிலோமீட்டா் சுற்றளவில் உள்ள அனைத்து கிணறுகளின் நீா் மட்டமும் 2 நாள்களில் உயா்ந்தது.

இந்தக் கிணற்றை, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அபூா்வா, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், இந்த கிணறு குறித்து நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் வந்து கிணற்றை பாா்த்து செல்கின்றனா். இந்நிலையில் இந்த கிணறு பற்றிய தகவல் அறிந்து சென்னை ஐஐடி பேராசிரியா் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை ஆயன்குளம் வந்து கிணற்றை ஆய்வு செய்தனா்.

பின்னா் 5 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள கிணற்றில் இருந்து நீா் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனா். மேலும் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ய உள்ளதாவும் அவா்கள் தெரிவித்தனா். அப்போது வட்டாட்சியா் செல்வகுமாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com