முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கிறிஸ்துராஜா பள்ளியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
By DIN | Published On : 10th December 2021 11:10 PM | Last Updated : 11th December 2021 06:22 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், திருநெல்வேலி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி பங்கேற்று, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்ப்பதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணா்வு கருத்துரையாற்றினாா். இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.