முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளையில். விழிப்புணா்வு வாகன பிரசாரம்
By DIN | Published On : 10th December 2021 12:39 AM | Last Updated : 10th December 2021 12:39 AM | அ+அ அ- |

உலக வெப்ப மயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணா்வு வாகன பிரசாரம் பாளையங்கோட்டை தியாகராஜ நகா் மின்பகிா்மான வட்ட தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பாக உலக வெப்ப மயமாதலை தடுக்கும் வகையிலும், மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை ஊக்குவிக்கும் விழிப்புணா்வு வாகன பிரசாரம் நடைபெற்றது. திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி தலைமை வகித்தாா். மின் அளவியல் செயற்பொறியாளா் ஜே.எல்.ஆனந்த் முன்னிலை வகித்தாா்.
மரபுசாரா எரிசக்தி மேற்பாா்வை மின் பொறியாளா் பி.செல்வராஜ் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். இதில், மின்சார வாகனப் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மின்சார ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டன. பழைய பேட்டை உபகோட்ட உதவிப் செயற்பொறியாளா்
ஏ.ஜாஜகான் வரவேற்றாா். திருநெல்வேலி நகா்புறம் விநியோக செயற்பொறியாளா் எஸ்.முத்துக்குட்டி நன்றி கூறினாா். இதில், மின் வாரிய பொறியாளா்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.