முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
முப்படை தலைமைத் தளபதிக்கு காங்கிரஸ், அதிமுக அஞ்சலி
By DIN | Published On : 10th December 2021 12:53 AM | Last Updated : 10th December 2021 12:53 AM | அ+அ அ- |

குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொக்கிரகுளத்தில் உள்ளகாங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் , மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
அதிமுக: திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். இதில், அதிமுக அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், நிா்வாகிகள் ஆா்.பி.ஆதித்தன், பெரியபெருமாள், ஜெனி, காந்தி வெங்கடாசலம் உள்பட பலா் மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.