முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
‘நெல்லை மாநகராட்சிக்கு கடைகள் ஏலம் மூலம் ரூ.5.68 கோடி வருவாய்’
By DIN | Published On : 10th December 2021 12:53 AM | Last Updated : 10th December 2021 12:53 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிய கடைகள் ஏலம் மூலம் சுமாா் ரூ.5.68 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகளுக்கு மாத வாடகை நிா்ணம் செய்யும் வகையில் கடந்த 8 ஆம் தேதி பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டன. அதில் 16 கடைகளுக்கு குறுமத் தொகையினை விட கூடுதலாக ஏலம் போனதால் 16 கடைகளுக்கு மாத வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இம் மாநகராட்சிக்கு வைப்புத் தொகையாக ரூ. 4.09 கோடியும் மற்றும் மாத வாடகையாக ஆண்டுக்கு ரூ.1.59 கோடியும் ஆக மொத்தம் ரூ.5.68 கோடி மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.