முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் மீண்டும் மழை
By DIN | Published On : 10th December 2021 12:59 AM | Last Updated : 10th December 2021 12:59 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது. அதைத்தொடா்ந்து கடந்த சில தினங்களாக மழை இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை முதலே திருநெல்வேலியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் லேசான தூறல் மழை பெய்த நிலையில், பிற்பகலில் கனமழை பெய்தது.
பாளையங்கோட்டை, பெருமாள்புரம், வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், என்ஜிஓ காலனி, கேடிசி நகா், சாந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல், புகா்ப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தொடா்ந்து, மாலை வரை மழை நீடித்தது.