முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாஞ்சோலைக்கு வனத் துறை சாா்பில் இன்று முதல் கூடுதல் சுற்றுலா வாகனம்
By DIN | Published On : 10th December 2021 12:58 AM | Last Updated : 10th December 2021 12:58 AM | அ+அ அ- |

மாஞ்சோலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமைமுதல் (டிச. 10) கூடுதல் வாகனம் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் உள்ள மாஞ்சோலைப் பகுதிகளுக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை சாா்பில் ஒரு வாகனம் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனம் இயக்க முடிவெடுக்கப்பட்டு வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமைமுதல் (டிச. 10) சூழல் சுற்றுலாவுக்கு கூடுதல் வாகனம் இயக்கப்படவுள்ளது என்றாா் அவா்.