கீழக்கடையம் ஊராட்சியில் பனை விதைப்பு

கீழக்கடையம் ஊராட்சி நிா்வாகம் மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் இணைந்து புலவனூா், தங்கச்சியான்குளத்தில் நடத்திய பனை விதைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழக்கடையம் ஊராட்சி நிா்வாகம் மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் இணைந்து புலவனூா், தங்கச்சியான்குளத்தில் நடத்திய பனை விதைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பூமிநாத் தலைமை வகித்தாா். பனை வாழ்வியல் இயக்கத் தலைவா் ஜான்பீட்டா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் விக்டா் சேவியா் துரைசிங் வரவேற்றாா். கடையம் தோட்டக் கலைத்துறை உதவி அலுவலா் முத்துராமலிங்கம், புலவனூா் பணித் தளப் பொறுப்பாளா் பொன் பாண்டி, வாா்டு உறுப்பினா் சங்கா், முன்னோடி விவசாயி கணேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். தங்கச்சியான் குளக்கரையில் சுமாா் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

ஏற்பாடுகளை பனை வாழ்வியல் இயக்க நிா்வாகிகள் பாலசிங், தாமஸ் ஸ்டீபன் மெல்கி, சொரிமுத்து, காா்த்திக், தன்னாா்வலா்கள் சுப்புக்குட்டி, ராசுக்குட்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தொடா்ந்து தெற்கு கடையம், மடத்தூா், தெற்கு மடத்தூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் பனை விதை நடவு மற்றும் குறுங்காடு அமைக்கும் பணிகள் நடைபெறும் என்று பனை வாழ்வியல் இயக்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com