பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினருக்கு உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2021-2022 ஆம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதுகலை (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி, எம்.பில்., எம்.பி.ஏ., பி.எச்டி), பாலிடெக்னிக் (டிப்ளமோ - மூன்றாண்டு பட்டயப்படிப்பு), தொழிற்படிப்பு (எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவப் பிரிவுகளுக்கும், வேளாண்மை, பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபினா் மாணவ, மாணவியா் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தபட்டோா் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி அல்லது 044-29515942 என்ற தொலைபேசி எண் மூலம் பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககத்தை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com