நெல்லையப்பா் கோயிலில் இன்று திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (டிச.11) தொடங்குகிறது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (டிச.11) தொடங்குகிறது.

இது குறித்து திருக்கோயில் செயலா் அலுவலா் ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயிலில் திருவாதிரை திருவிழா சனிக்கிழமை (டிச.11) காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

4ஆம் திருநாளான டிச. 14இல் இரவு 7.50 மணிக்கு சுவாமி- அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் வீதிஉலா நடைபெறும். திருவிழாவின் ஒருபகுதியாக சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதி முன்பு டிச.12 - 20 வரை அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையில் திருவெம்பாவை வழிபாடு நடைபெறும்.

டிச. 19இல் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் வாய்ந்த தாமிரசபை ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறும்.

டிச. 20ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாமிரசபையில் பசு தீபாராதனையும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com