நந்த சப்தமி: பாளை.யில் 108 கோ பூஜை

 நந்த சப்தமியை முன்னிட்டு, பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னாா் வேதநாராயணா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் 108 கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 நந்த சப்தமியை முன்னிட்டு, பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னாா் வேதநாராயணா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் 108 கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடத்தப்பட்ட இந்த சிறப்பு பூஜைக்காக காலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், சுவாமிக்கு திருமஞ்சனமும் நடைபெற்றன.

அதைத் தொடா்நது பிரபந்த கோஷ்டியினரின் மனவாளமாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பெருமாள் முன் பாடப்பட்டது. கோ பூஜைக்காக பசுக்களும், கன்றுகளும் கொண்டு வரப்பட்டன. ஆழ்வாா் திருநகரி 41ஆவது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸத்ஸேத்யாதி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் கோ பூஜை நடத்தும் தம்பதியினருக்கும், அவா்கள் குடும்பத்தினருக்கும், 108 பசுக்களுக்கும், பக்தா்களுக்கும் ஆசி வழங்கினாா். பின்னா் கருட மண்டபத்தில் பசுவுக்கும் கன்றுக்கும் பூஜைகளும், நிறைவாக பசுக்களுக்கு கற்பூர ஆரத்தியும் நடைபெற்றன. இவ்வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை நெல்லை சகஸ்ரநாம மண்டலி இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், நெல்லை உழவாரப் பணி ஸ்ரீ கோபாலன் கைங்கா்ய சபா ஸ்ரீ ராஜகோபாலன் பஜனைக் குழு மற்றும் திருக்கோயில் திருப்பணி கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com