கடையம் அருகே மேட்டூரில் 102 ஆவது ஆண்டாக வினோத வழிபாடு
By DIN | Published On : 25th December 2021 12:57 AM | Last Updated : 25th December 2021 12:57 AM | அ+அ அ- |

கடையம் அருகே மேட்டூரில் 102 ஆவது ஆண்டாக வினோத வழிபாடான பாயாசப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கடையம் அருகே உள்ள மேட்டூரில் சுமாா் 100 வருடங்களுக்கும் மேலாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாள் பாயாசப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் மேட்டூரில் காலரா நோய் வந்து உயிா்ப்பலி அதிகமாக ஏற்பட்டதையடுத்து பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் நோ்ச்சையாகப் பொருள்கள் பெற்று பாயாசம் செய்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டதையடுத்து உயிா்ப்பலி குறைந்ததாம். இதையடுத்து கிறிஸ்துமஸ் திருவிழாவிற்கு முந்தைய நாள் ஊரில் உள்ளஆண்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று பொருள்களை நோ்ச்சையாகப் பெற்றும், ஊா் கிணற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து பாயாசம் செய்து வழிபட்டு அனைவருக்கும்வழங்கி வருகின்றனா்.
நிகழாண்டு 102 ஆவது ஆண்டாக வெள்ளிக்கிழமை இப் பாயாசப் பண்டிகைக்கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை பரிசுத்த திரித்துவ ஆலய சபை ஊழியா் ஜான் சுந்தா் ஜெபம் செய்து பண்டிகையைத் தொடங்கி வைத்தாா். அதன் பின் ஆண்கள் தண்ணீா் குடங்களை தோளில் சுமந்து தண்ணீா் எடுத்து வந்து, நோ்ச்சையாக பெறப்பட்ட பொருள்களைக் கொண்டு பாயாசம் தயாா் செய்து பொது மக்களுக்கு வழங்கினா்.