ஏா்வாடி அருகே குண்டா் தடுப்பு சட்டத்தில் ஒருவா் கைது
By DIN | Published On : 25th December 2021 12:56 AM | Last Updated : 25th December 2021 12:56 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவா் மீண்டும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
ஏா்வாடி அருகே உள்ள சீனிவாசபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் பிரவீன்(50). இவரை ஒரு வழக்கு தொடா்பாக நான்குனேரி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்திருந்தனா். இந்நிலையில் இவரை மீண்டும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
இதையடுத்து பிரவீனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டதை அடுத்து, நான்குனேரி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பிரேமா குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரவீனை கைது செய்தாா்.