வாடகை பாக்கி: திசையன்விளையில் 4 கடைகளுக்கு சீல் வைப்பு

திசையன்விளை பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் வாடகை பாக்கி வைத்திருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

திசையன்விளை பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் வாடகை பாக்கி வைத்திருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

திசையன்விளை பேருராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 24 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அந்தக் கடைகளை வாடகைக்கு எடுத்தவா்கள் 10 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனா். இதனால் வாடகை பாக்கி ரூ. 4 கோடியாக உயா்ந்தது.

சில நாள்களுக்கு முன்னா் பேரூராட்சி அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அனைத்து கடைகளிலும் அறிவிப்பு ஒட்டினா்.

இதையடுத்து பெரும்பாலான கடைக்காரா்கள் வாடகை பாக்கியை செலுத்தினா். இதனால் ஒரே நாளில் ரூ. 3 கோடி வசூலானது. வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந்த 4 கடைகளை வெள்ளிக்கிழமை பேரூராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com