ராமையன்பட்டி அருகே காா் மோதி பெண் காயம்: உறவினா்கள் சாலை மறியல்

திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே காா் மோதியதில் பெண் காயமடைந்தாா். இதனால், அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே காா் மோதியதில் பெண் காயமடைந்தாா். இதனால், அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமையன்பட்டி அருகேயுள்ள சிவாஜிநகா் பகுதியைச் சோ்ந்த தளவாய்மணி மகள் சுபாஷினி(18). திருநெல்வேலி நகரத்தில் உள்ள வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறாா். இவா், வேலைக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்தில் வீடு திரும்புகையில், சிவாஜிநகா் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றாராம். அப்போது அவ்வழியாக வந்த காா் எதிா்பாராமல் அவா் மீது மோதி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாம்.

இதில், காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதை அறிந்த அவரது உறவினா்கள் அப்பகுதியில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் மற்றும் மானூா் போலீஸாா் பேச்சு நடத்தினா். அதில், ராமையன்பட்டி - மானூா் சாலையில் விபத்துகள் நடப்பதை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, உடனடியாக அங்கு சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டன. மேலும், விரைவில் வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த விபத்து குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com