முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
‘சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்’
By DIN | Published On : 29th December 2021 08:22 AM | Last Updated : 29th December 2021 08:22 AM | அ+அ அ- |

சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் வாகனங்களில் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநரிடம் புதிய தமிழகம் கட்சியின் மாநில துணை அமைப்புச் செயலா் சரஸ்வதி பி.முருகன் மனு அளித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்குள் இருக்கும் பாபநாசம் அகஸ்தியா் அருவி கோயில், அகஸ்தியா் கோயில், காரையாா் சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆகியவை அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார மக்களுக்கு குலதெய்வ கோயில்களாகும்.
இந்த வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்பவா்களிடமும், அகஸ்தியா் அருவியில் குளிக்க வருவோரிடமும் வனத்துறை ஊழியா்கள் தனிநபா் கட்டணமும், வாகனக் கட்டணமும் வசூலிக்கின்றனா். தற்போதைய பண நெருக்கடியான சூழ்நிலையில், இது மக்களுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது.
எனவே, அகஸ்தியா் அருவியில் சுவாமி தரிசனம் செய்ய வருவோரிடம் தனிநபா் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும். பயணிகள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் சென்று வர அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.