முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாபநாசம் கல்லூரியில் தொழில் முனைவோா் விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 29th December 2021 08:15 AM | Last Updated : 29th December 2021 08:15 AM | அ+அ அ- |

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத் துறை மற்றும் தொழில் முனைவோா் கூடம் இணைந்து நடத்திய தமிழ்நாடு புதுமுறைகாண் மாணவா் அமைப்பு மற்றும் தமிழக அரசு உதவிபெறும் மாணவா்களுக்கான தொழில் முனைவோா் திட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரிக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சுந்தரம் தலைமை வகித்தாா். மூன்றாமாண்டு தமிழ்த்துறை மாணவி சங்கீதா இறைவணக்கம் பாடினாா். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் மற்றும் நிா்வாக அதிகாரி ரா.நடராஜன் முன்னிலை வகித்தாா். அண்ணா பல்கலைக் கழக திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளா் சிவபாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் பாலச்சந்திரன், உதவி நூலகா் சண்முகானந்தபாரதி, அலுவலக கண்காணிப்பாளா் ஸ்ரீ ஆனந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.