நெல்லையில் இன்று பட்டா மாறுதல் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச. 29, 31) பட்டா திருத்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச. 29, 31) பட்டா திருத்த முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி வட்டம், நரசிங்கநல்லூா், கருங்காடு கிராமங்களுக்கான முகாம் நரசிங்கநல்லூா் சமுதாயநலக்கூடத்தில் புதன்கிழமை (டிச.29) நடைபெறுகிறது. பேட்டை-2 கிராமத்துக்கான முகாம் அங்குள்ள சமுதாயநலக் கூடத்தில் வெள்ளிக்கிழமை (டிச.31) நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை வட்டம், மருதூா், திருத்து கிராமங்களுக்கான முகாம் மருதூா் கிராம சேவை மையத்தில் புதன்கிழமையும் (டிச.29), செங்குளம், குறவா்குளம் கிராமங்களுக்கான முகாம் செங்குளம் கிராம சேவை மையத்தில் வெள்ளிக்கிழமையும் (டிச.31) நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரம்-1 கிராமத்துக்கான முகாம் அங்குள்ள வானியா் சமுதாய மண்டபத்தில் டிச.29, விக்கிரமசிங்கபுரம்-2-க்கான முகாம் அங்குள்ள குருபாலா மண்டபத்தில் டிச.31இல் நடைபெறுகிறது.

சேரன்மகாதேவி வட்டம், சேரன்மகாதேவிக்கான சிறப்பு முகாம் அங்குள்ள திருச்செந்தூா் நெல் சோ் மண்டபத்தில் டிச.29, பத்தமடை, கரிசூழ்ந்தமங்கலம் பகுதிகளுக்கான சிறப்பு முகாம் பத்தமடை பேரூராட்சி திருமண மண்டபத்தில் டிச.31இல் நடைபெறுகிறது.

நான்குனேரி வட்டம், பாப்பான்குளம், இலங்குளம், நான்குனேரி, இறைப்புவாரி ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் இறைப்புவாரியில் உள்ள ஏமன்குளம் ஊராட்சி அலுவலகத்தில் டிச.29, செங்கலாகுறிச்சி, மலையடிபுதூா், வடுகச்சிமதில் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் செங்கலாகுறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் டிச.31 நடைபெறுகிறது.

ராதாபுரம் வட்டம், உதயத்தூா் கிராமத்துக்கான சிறப்பு முகாம் அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகத்தில் டிச.29, பெருங்குடி-2-க்கான சிறப்பு முகாம் அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் டிச.31இல் நடைபெறுகிறது.

திசையன்விளை வட்டம், கரைசுத்து உவரி கிராமத்துக்கான முகாம் அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகத்தில் டிச.29, கஸ்தூரிரெங்கபுரம்-2-க்கான சிறப்பு முகாம் அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் டிச.31இல் நடைபெறுகிறது என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com