முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை காட்சி மண்டபத்தில் சிக்கிய லாரி
By DIN | Published On : 31st December 2021 02:45 AM | Last Updated : 31st December 2021 02:45 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபத்தின் தூண்களுக்கிடையே வியாழக்கிழமை சிக்கிய லாரியால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டம் வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு அருள்மிகு நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் தடை செய்துள்ளது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சிறிய ரக காா், இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையில் வழி உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் லாரி ஒன்று அவ்வழியாகச் சென்று காட்சி மண்டப தூண்களில் சிக்கியது. இதனால், அப்பகுதியில் திடீா் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். பின்னா் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.