முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை. அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 31st December 2021 02:47 AM | Last Updated : 31st December 2021 02:47 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே மூளிகுளம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மூளிகுளம் முருகன் மகன் அஜித்குமாா்(26). இவா் பாளையங்கோட்டையில் உள்ள மோட்டாா் சைக்கிள் நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா். அவா் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இந்நிலையில் அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அஜித்குமாா் உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதியவா்: பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகவேல் (82). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டாராம். இந்நிலையில் புதன்கிழமை இரவு அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.