முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சமூக பாதுகாப்புத் துறை இளைஞா் நீதிக் குழுமத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 31st December 2021 02:48 AM | Last Updated : 31st December 2021 04:35 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சமூக பாதுகாப்புத்துறை இளைஞா் நீதிக் குழுமத்தில் உதவியாளா் மற்றும் கணினி இயக்குபவா் பணியிடத்தில் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி சமூக பாதுகாப்புத்துறை இளைஞா் நீதிக் குழுமத்தில் உதவியாளா் மற்றும் கணினி இயக்குபவா் பணியிடத்தில் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதிகள்: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தட்டச்சு சான்று, கணினி இயக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பவட்டவா்களாக இருத்தல் கூடாது. மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.9,000 வழங்கப்படும்.
இந்த ஒப்பந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சோ்ந்த நாளிலிருந்தும ஓராண்டுக்கு நடப்பில் இருக்கும். தொகுப்பூதியம் தவிர வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒரு மாத பணி நாள்கள் முடிவுற்ற பின்னா் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். வார விடுமுறை ஞாயிறு மட்டும் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளா், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை. இந்த ஒப்பந்தமானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்.
இதற்கான விண்ணப்படிவத்தை ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வரும் ஜனவரி 17-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 32, 33 ஏ ராஜராஜேஸ்வரி நகா், (மாலா மெடிக்கல் சென்டா் காம்ப்ளக்ஸ்) திருநெல்வேலி -627002 என்ற முகவரியில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2901953, 2551953 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.