வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் : மாவட்ட பாா்வையாளா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

 மூன்றாவது கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 குறித்த அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

 மூன்றாவது கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 குறித்த அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் முதன்மைச் செயல் அலுவலருமான எம்.லெட்சுமி தலைமை வகித்தாா். ஆட்சியா் விஷ்ணு முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022 தொடா்பாக மூன்று ஆய்வுகள் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல் ஆய்வு கடந்த நவ. 14-ஆம் தேதியும், இரண்டாவது ஆய்வுக் கூட்டம் கடந்த 18-ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது கட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜன.1-ஆம் தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2022 நடைபெற்று வருகிறது. வாக்காளா் பட்டியலில் பிழையில்லாத நிலையை உருவாக்கிட அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதவி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியினை மத்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ்குமாா், தோ்தல் தனி வட்டாட்சியா் கந்தப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com