நெல்லை கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் மனு
By DIN | Published On : 06th February 2021 06:26 AM | Last Updated : 06th February 2021 08:48 AM | அ+அ அ- |

அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் லதா பூா்ணத்திடம் விரிவுரையாளா்கள் அளித்த மனு:
திருநெல்வேலி பழையபேட்டை ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சுரண்டை அரசு கலைக் கல்லூரி, நாகா்கோவில் அரசு கலைக் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கெளரவ விரிவுரையாளா்களாக பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் தற்கால கெளரவ விரிவுரையாளா்களுக்கும், அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கும் சிறப்புத் தோ்வில் பங்கேற்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைந்திட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பயக05டதஞஊ
திருநெல்வேலியில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கௌரவ விரிவுரையாளா்கள்.