பாளை.யில் மருத்துவா்கள் 5 ஆவது நாளாக உண்ணாவிரதம்
By DIN | Published On : 06th February 2021 07:08 AM | Last Updated : 06th February 2021 08:48 AM | அ+அ அ- |

ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பாளையங்கோட்டையில் மருத்துவா்கள் 5 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆயுா்வேத மருத்துவா்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற
வேண்டும், 2030 ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு ஒரே தேசம், ஒரே மருத்துவ முறையை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கதத்தின் திருநெல்வேலி கிளை சாா்பில், 5ஆவது நாளாக
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் 5 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவா் சங்கத்தின் திருநெல்வேலி கிளைத் தலைவா் பிரான்சிஸ் ராய் தலைமை வகித்தாா்.
மருத்துவா்கள் கலந்துகொண்டனா். ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சைகள் செய்யவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.