களக்காடு அருகே குளத்தில் விவசாயி சடலம்
By DIN | Published On : 09th February 2021 01:35 AM | Last Updated : 09th February 2021 01:35 AM | அ+அ அ- |

களக்காடு அருகே குளத்தில் விவசாயி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு அருகே படலையாா்குளம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் விவசாயி மகாலிங்கம் (75). இவா், ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டை விட்டு வெளியே சென்றாராம். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அவா் ஊருக்கு அருகே உள்ள செட்டிமேடு குளத்தில் சடலமாக மிதந்துள்ளாா். தகவலறிந்த களக்காடு காவல் ஆய்வாளா் காளியப்பன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.