சிறுமிக்கு கொலை மிரட்டல்: லாரி ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 10th February 2021 08:01 AM | Last Updated : 10th February 2021 08:01 AM | அ+அ அ- |

சீவலப்பேரி பகுதியில் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநருக்கு, 4 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சீவலப்பேரி நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த, சுப்பையா மகன் துா்க்கைமுத்து (30). இவா் கடந்த 2016ஆம் ஆண்டு, சீவலப்பேரி கோயிலுக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை வழிமறித்து அவதூறாகப் பேசியும், அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது தொடா்பாக சீவலப்பேரி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமாா், குற்றம் சாட்டப்பட்டட துா்க்கைமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.