சேரன்மகாதேவியில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேரன்மகாதேவியில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை 5 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கக் கோரியும், தனியாா் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 % இடஒதுக்கீடு வழங்கச் சட்டம் இயற்றக் கோரியும் இப் போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவா் செல்வ சுந்தரி தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் இசக்கிமுத்து, முக்கூடல் ஆக்ன, வீரவநல்லூா் மாசானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலா் கற்பகம், ஒன்றியத் தலைவா் ரவி ஆகியோா் உரையாற்றினாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சேரன்மகாதேவி காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப் பேச்சு நடத்தினாா். அவரிடம் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி மாலை 6 மணி வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இதில், பெண் மாற்றுத் திறனாளிகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com