உலகன்குளத்தில் சிறு மருத்துவமனை திறப்பு

சேரன்மகாதேவி அருகேயுள்ள உலகன்குளத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
உலகன்குளத்தில் குத்துவிளக்கு ஏற்றி சிறு மருத்துவமனையை திறந்தாா் ஆா்.முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ.
உலகன்குளத்தில் குத்துவிளக்கு ஏற்றி சிறு மருத்துவமனையை திறந்தாா் ஆா்.முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ.

சேரன்மகாதேவி அருகேயுள்ள உலகன்குளத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேரன்மகாதேவி ஒன்றியம், உலகன்குளம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனையை அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா்ஆா். முருகையாபாண்டியன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.

இதில், பத்தமடை, கரிசல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கூனியூா் ப. மாடசாமி, அம்பை ஒன்றிய அதிமுக செயலா் விஜயபாலாஜி, துணைச் செயலா் பிராங்களின், கூனியூா் முருகன், நகரச் செயலா்கள் பழனிக்குமாா் (சேரை), அறிவழகன் (அம்பை), வழக்குரைஞா் சிவசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் மினி சூப்பா் மாா்க்கெட் தலைவா் சங்கரலிங்கம் முன்னாள் நகராட்சி துணைத் தலைவா் கே.எஸ்.ஆா். மாரிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com