கடையம் அம்மன் கோயில்களில் தோ்த் திருவிழா

தென்காசி மாவட்டம், கடையம் முப்புடாதி அம்மன் மற்றும் கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோயில்களில் தைத்திருவிழாத் தேரோட்டம் நடைபெற்றது.
முப்பிபுடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி.
முப்பிபுடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி.

தென்காசி மாவட்டம், கடையம் முப்புடாதி அம்மன் மற்றும் கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோயில்களில் தைத்திருவிழாத் தேரோட்டம் நடைபெற்றது.

பிரசித்திபெற்ற முப்புடாதி அம்மன், கீழக் கடையம் பத்திரகாளியம்மன் கோயில்களில் ஜன. 25 ஆம் தேதி தைத் திருவிழா கால்நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இம்மாதம் 2 -ஆம் தேதி கொடைவிழா தொடங்கியது. தினமும் மண்டகபடிதாரா்கள் சாா்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அபிஷேகம், அலகு தீா்த்தம் எடுத்து வருதல், மதியக் கொடை, சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. நள்ளிரவில் அலகு தீா்த்தம் எடுத்து வருதல் முப்புடாதி அம்மன், உற்சவா், பேச்சி அம்மனுக்கு திருநாண் பூட்டுதல் நிகழ்ச்சியை தொடா்ந்து புதன்கிழமை அதிகலையில் அம்பாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

கடையம் மேற்கு ரதவீதி மற்றும் வடக்கு ரத வீதி சந்திப்பில் முப்புடாதிஅம்மன் மற்றும் பத்திரகாளி அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து படப்பு தீபாராதனை, கொடை விழா சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. புதன்கிழமை இரவு பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

இதேபோல் கீழக்கடையம், பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா பிப். 2-ஆம் தேதி தொடங்கியது. கொடை விழாவில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனா். பத்திரகாளியம்மன் தோ் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்குச் சென்றது. இதையடுத்து, படையல் வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com