மாற்றுத்திறனாளிகள் 2-ஆவது நாளாக போராட்டம்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் 2ஆவது நாளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 15 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் 2ஆவது நாளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 15 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க உப தலைவா் பி.தியாகராஜன் தலைமை வகித்தாா். மெய்யாச்சாமி, கிளை பொறுப்பாளா்கள் நடராஜன், சக்கூா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com