‘திமுக கூட்டணியின் வெற்றி உச்சி சூரியனின் பிரகாசம் போல உள்ளது': வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி என்பது உச்சி சூரியனின் பிரகாசம் போல  உள்ளது  என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளிடமிருந்து தேர்தல் நிதி பெற்றார் பொதுச்செயலர் வைகோ.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளிடமிருந்து தேர்தல் நிதி பெற்றார் பொதுச்செயலர் வைகோ.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி என்பது உச்சி சூரியனின் பிரகாசம் போல  உள்ளது  என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

மதிமுக சார்பில் தென்மண்டல தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தேர்தல் நிதியளிப்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்திற்கான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தேர்தலைச் சந்திக்க உள்ளது. தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லை. இத்தேர்தலில் திமுக கூட்டணிக்கான வெற்றி உச்சி சூரியனின் வெளிச்சம்போல் மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதோடு, சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கு அழிவு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அப்புறப்படுத்த மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். திமுக அணிக்கான ஆதரவு பெருகி வருவதால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் முதல்வர் அவதூறு பேசுகிறார். 
சசிகலா வருகையால் தமிழகத்தில் அரசியல் ரீதியாக மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.

மதிமுகவில் வாரிசு அரசியல் ஏதுமில்லை. எனது மகன் வையாபுரி கட்சிப் பொறுப்புகளில் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும். விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இக்கூட்டத்தில் மதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்டச்செயலர் கே.எம்.ஏ.நிஜாம், புறநகர் மாவட்டச் செயலர் தி.மு.ராஜேந்திரன், நிர்வாகிகள் கல்லத்தியான்,  எழுத்தாளர் செ.திவான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com