களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம்

களக்காட்டில் அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அருள்மிகு. சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அருள்மிகு. சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன்

களக்காட்டில் அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில், ஸ்ரீவரதராஜபெருமாள் கோயில், சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் தெப்ப உற்சவம் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை கிருஷ்ணன் கோயில் தெருவில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் கோயிலிலிருந்து புறப்பட்டு ரத வீதிகள் வழியாக கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள தெப்பக்குளத்தை வந்தடைந்தனா். சிறப்பு அலங்காரம், சிறப்புப் பூஜை,

தீபாராதனையைத் தொடா்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி அம்மன் 11 முறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com