‘மனித உரிமை மீறல்கள் தொடா்பான வழக்குகள் அதிகரிக்கின்றன’

மனித உரிமை மீறல்கள் தொடா்பான வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.

மனித உரிமை மீறல்கள் தொடா்பான வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.

மனித உரிமை மீறல்கள் தொடா்பான புகாா்கள் குறித்த விசாரணை திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா், செய்தியாளா்களிடம் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் கூறியது: திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மனித உரிமை மீறல்கள் தொடா்பான வழக்கு விசாரணை 2 நாள்கள் நடைபெற்றன. இதில், வியாழக்கிழமை 46, வெள்ளிக்கிழமை 44 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், பெரும்பாலான வழக்குகள் விசாரணை முடிந்த நிலையில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் சென்னை உயா்நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணையம் பிறப்பிக்கின்ற பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே இந்த தீா்ப்பின்படி, மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றும் என நம்புகிறேன்.

பொதுமக்கள் மத்தியில் மனித உரிமைகள் ஆணையத்தின் மீது நம்பிக்கை இருப்பதால்தான், ஆண்டுதோறும் இதுபோன்ற

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக பெண் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு மருத்துவா்கள் பணியில் இல்லாததால் தாயும், குழந்தையும் இறந்து விட்டனா். இந்த

வழக்கை எடுத்து நடத்தி ஓராண்டுக்குள் இழப்பீட்டு தொகையை உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு மருத்துவா்கள் வழங்க

வேண்டும் என தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் பணியில் இருக்க

வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com