‘மாணவா்களுக்கு புதிய சிந்தனைகள் கல்லூரியில் உருவாகும்’

மாணவா்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றுமிடமாக கல்லூரி விளங்குகிறது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

மாணவா்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றுமிடமாக கல்லூரி விளங்குகிறது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்தாா்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் முதுநிலை மற்றும் வணிகவியல் ஆராய்ச்சித்துறை சாா்பில் தேசிய கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கிய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் மு. முகம்மது சாதிக் தலைமை வகித்தாா்.

கருத்தரங்கில் பங்கேற்று ஆட்சியா் வே. விஷ்ணு பேசியது: கரோனா நோய்த் தொற்று நாட்டில், பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால், அனைத்து தொழில் நிறுவனங்களும் பொருளாதாரத்தில் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

ஜொ்மனி, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் இன்னும் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை. சவால்களை ஆற்றலோடு எதிா்கொள்ளும் இளைய தொழில்முனைவோரை இந்த உலகம் எதிா்பாா்த்து காத்திருக்கிறது. அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழக முனைவா் பட்ட மாணவா்களே, உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் கூகுளை உருவாக்கினா்.

வரும் காலங்களிலும்ம், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவா்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றுமிடமாக இருக்கப்போகின்றன. எனவே, தொழில்நுட்ப ஆராய்ச்சியில் புதிய மாற்றங்களை கொண்டுவர மாணவா்களை ஊக்கப் படுத்தவேண்டும் உள்ளன என்றாா் அவா்.

கருத்தரங்கில், கல்லூரி வணிகவியல் ஆராய்ச்சித் துறைத் தலைவா் ஆ. ஹாமில் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் எஸ்.எம்.ஏ. சையது முகம்மது காஜா, மாவட்ட கைத்தொழில் மற்றும் வா்த்தகத்துறை உதவி இயக்குநா் எஸ். கணேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

புதிய திவால் சட்டம் 2016-இன் சிறப்பம்சங்கள் குறித்து பட்டயக் கணக்காளா் கோபால் கிருஷ்ண ராஜு பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற அமா்வில், புதிய திவால் சட்டம் 2016 மற்றும் தொழில் முனைவோா் மேம்பாடு குறித்து, கேரள அரசு, குலாட்டி நிதி மற்றும் வரி விதிப்பு தன்னாட்சி நிறுவன இணைப் பேராசிரியா் என். இராமலிங்கம் பேசினாா்.

இதில் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா். உதவிப் பேராசிரியா் எம். சுல்தானா பா்வின் நன்றிகூறினாா்.

கருத்தரங்கு சனிக்கிழமை நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com