மானூா் அருகே குண்டா் சட்டத்தில் மூவா் கைது
By DIN | Published On : 13th February 2021 07:07 AM | Last Updated : 13th February 2021 07:07 AM | அ+அ அ- |

மானூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புள்ள மூவா் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
மானூா் அருகே கீழபிள்ளையாா்குளம் குறிச்சி நகரை சோ்ந்த ராமசாமி மகன்கள் காளியப்பன் (39), கணபதி என்ற கணேசன்(37), சேதுராயன் புதூா் பகுதியைச் சோ்ந்த சுடலைக்கண்ணு மகன் மகாராஜன்(24). இவா்கள் மூவரும் அப்பகுதியில் கொலை,
கொலை முயற்சி போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தனராம்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், மூவரையும், குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க
ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில், மூவரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.