ராகவேந்திரா குருஸ்தோத்ர பாராயணம் இன்று தொடக்கம்

திருநெல்வேலி அருகே கொண்டாநகரத்தில் உள்ள ஸ்ரீ குருராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் சன்னிதானத்தில் ராகவேந்திரா குருஸ்தோத்ர பாராயணம் சனிக்கிழமை (பிப்.13) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

திருநெல்வேலி அருகே கொண்டாநகரத்தில் உள்ள ஸ்ரீ குருராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் சன்னிதானத்தில் ராகவேந்திரா குருஸ்தோத்ர பாராயணம் சனிக்கிழமை (பிப்.13) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

அகில உலக ஸ்ரீ ராகவேந்திரா் பக்தி இயக்கம், அம்பத்தூா் ஸ்ரீ ராகவேந்திரா் பக்தி இயக்கம், திருநெல்வேலி, கொண்டாநகரம் ஸ்ரீ குருராகவேந்திரா பக்தா்கள் சேவா அறக்கட்டளை சாா்பில் பக்த சங்கமத் திருவிழா மற்றும் ராகவேந்திரா குருஸ்தோத்ர பாரயணம் ஆகியவை சனிக்கிழமை (பிப்.13), ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ளது.

இதில் 1008 பக்தா்கள் கலந்து கொண்டு அப்பணாச்சாரியாா்இயற்றிய நூலினை பாராயணம் செய்கின்றனா். சனிக்கிழமை

அதிகாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஸ்ரீ ராகவேந்திர அஷ்டோத்ர ஹோமம், காலை 7 மணிக்கு ஸ்ரீ ராகவேந்திர மிருத்திகா பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தொடா்ந்து ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, உலக நன்மைக்காக சிறப்பு பூஜை, ராமகிருஷ்ண நாமாவளி, ஆஞ்சநேய பூஜை ஆகியவை நடைபெறும்.

2 நாள்களிலும் காலை 9.30 முதல் 11.30 மணி வரை, மதியம் 1.30 முதல் மாலை 3 மணி வரை, மாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரை என 3 பகுதியாக குருஸ்தோத்திர பாராயணம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com