ரூ.1 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி தொடக்கம்
By DIN | Published On : 13th February 2021 07:12 AM | Last Updated : 13th February 2021 07:12 AM | அ+அ அ- |

வள்ளியூா் பேரூராட்சியில் வணிக வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தாா் ஐ.எஸ். இன்பதுரை எம்எல்ஏ.
வள்ளியூா் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வள்ளியூரில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 22 கடைகளுடன் கட்டப்படும் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான சட்டப்பேரவை
உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை அடிக்கல் நாட்டினாா்.
விழாவில் பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ், அதிகாரிகள் இஸ்மாயில், ஆறுமுகம், அதிமுக ஒன்றியச் செயலா் செல்வராஜ், நகரச் செயலா் பொன்னரசு, எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சண்முகபாண்டி, துணைச் செயலா்
எட்வா்ட்சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.