பட்டு வளா்ச்சித்துறை ஓய்வூதியா்சங்க மண்டல தொடக்க விழா
By DIN | Published On : 17th February 2021 06:28 AM | Last Updated : 17th February 2021 06:28 AM | அ+அ அ- |

தென்காசி: தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மதுரை மண்டல தொடக்க விழா குற்றாலத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் கே.கந்தசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் சுந்தரமூா்த்தி நாயனாா், மாவட்டத் தலைவா் சலீம் முகம்மது மீரான், வட்டக் கிளை தலைவா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா்.துரை உள்பட பலா் பேசினா்.
தொடா்ந்து, மதுரை மண்டலத்திலே மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளுக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
மண்டலத் தலைவராக கே.கந்தசாமி, துணைத் தலைவா்களாக சுப்பிரமணியபிள்ளை, அழகு ராமலிங்கம், சண்முகம், செயலராக இர.கருணாகரன், இணைச் செயலா்களாக முத்துராமன், காளீஸ்வரன், கணேசமூா்த்தி, பொருளாளராக எஸ்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா்களாக தங்கவேல், சமுத்திரபாண்டி, மண்டல தணிக்கையாளா்களாக வேலாயுதம், கல்யாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்: பட்டு வளா்ச்சித் துறையில் தினக்கூலி பணியாளா்களை 2010 முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்;
ஓய்வூதியம் வழங்கப்படாத சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த பணியாளா்களுக்கு பணி ஓய்வுக்குப்பின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும்; 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் தினக்கூலிப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.