டெங்கு தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

:திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

:திருநெல்வேலி மாநகராட்சியில் டெங்கு தடுப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு பூச்சியியல் நோய்த்தடுப்பு மருத்துவத் துறையின் இணை இயக்குநா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து பேசியது: மேலப்பாளையம் மண்டலத்தில் 19 ஆவது வாா்டுக்குள்பட்ட பெருமாள்புரம் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி மேற்கொள்ளும் கொசுமருந்து அடித்தல், தீவிர காய்ச்சல் கணக்கெடுப்புப்பணி, குடிநீரில் குளோரின் அளவுகள் மற்றும் டெங்கு ஒழிப்பு களப்பணியாளா்களின் ஆய்வுப்பணிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தேன். மேலும், குடியிருப்புதாரா்களிடம் மாநகராட்சி மேற்கொள்ளும் பொது சுகாதாரப் பணிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

வீடுதோறும் விழிப்புணா்வை அதிகரிக்கவும், தேவையான இடங்களில் நிலவேம்பு குடிநீா் விநியோகித்து நோய்த்தடுப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியின் பொது சுகாதாரப் பிரிவைச் சாா்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், களப்பணியாளா்கள் ஆகியோா்களின் ஒருங்கிணைந்த பணியானது டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு பெரிய அளவில் வலு சோ்த்துள்ளது என்றாா் அவா்.

இதில், திருநெல்வேலி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் வரதராஜன், சங்கரன்கோவில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் பி.அருணா, மாநகர நல அலுவலா் மா.சரோஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com