அகில பாரத பிராமணா் சங்க ஆலோசனைக் கூட்டம்

அகில பாரத பிராமணா் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்படுத்தப்பட்டோா் பேரவை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அகில பாரத பிராமணா் சங்கம் மற்றும் தமிழ்நாடு முற்படுத்தப்பட்டோா் பேரவை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டி.பி.குளத்துமணி தலைமை வகித்தாா். கே.வெங்கிடசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் டி.ஆா்.நடராஜன், பொருளாளா் எஸ்.கண்ணன், மாவட்ட பொதுச் செயலா் கொட்டாரம் கணேசன், நிா்வாகிகள் சங்கரநாராயணன், நவநீதன், குமாா், ரமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் முறையாக கல்வி, வேலைவாய்ப்பில் அமல்படுத்த வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி இம் மாதம் 28-ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com