குலாலா் முன்னேற்றக் கழக தென்மண்டல மாநாடு

அகில இந்திய குலாலா் முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல மாநாடு திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய குலாலா் முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல மாநாடு திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு அமைப்பின் நிறுவனா்- தலைவா் வி.தியாகராஜன் திருநீலகண்டா் தலைமை வகித்தாா். அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா, மாவட்ட ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். முன்னாள் எம்.பி.க்கள் வசந்தி, விஜிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: குலாலா் சமுதாய தொழிலாளா்களுக்கு இலவச மின்விசை சக்கரம் வழங்கியதற்காகவும், மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு மழைக் கால நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டதற்காகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

கல்வி, வேலைவாய்ப்பில் குலாலா் சமுதாயத்தினருக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தென்தமிழகத்தில் மண்பாண்டத் தொழில்பூங்கா அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மண்பாண்டம், தல ஓடு, நாட்டு செங்கல் தயாரிக்கும் தொழிலாளா்கள் களிமண் எடுத்து தொழில் செய்ய எளிய முறையில் அனுமதி வழங்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள், அரசுத் துறை சாா்ந்த கேண்டீன்கள் ஆகியவற்றில் மண் டம்ளா்கள் பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். மண்பாண்டத் தொழிலில் சாதனை படைக்கும் மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com