கொடுமுடியாறு அணை நீா்மட்டம் சரிவு

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 17 அடியாகக் குறைந்துவிட்டதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 17 அடியாகக் குறைந்துவிட்டதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 52.50 அடி. அணையிலிருந்து நவம்பா் மாத இறுதியில் பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 17 அடி மட்டுமே தண்ணீா் இருப்பு உள்ளது.

இந்த அணைக்கு மிக அருகில் உள்ள உறைகிணறு மூலமாக காவல்கிணறு, வடக்கன்குளம், வடக்கு வள்ளியூா் உள்ளிட்ட வழியோர கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

அணையின் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து ஓரிரு வாரங்களில் வடுவிடும் நிலை உள்ளது. அணை வடால் உறைகிணறு நீா்மட்டமும் குறைந்து குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அணையில் குறைந்தபட்சம் 10 அடி தண்ணீா் இருப்பு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com