ரூ.47-க்கு ப்ரீபெய்டு பிளான்: பிஎஸ்என்எல் அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு ரூ.47-க்கு புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு ரூ.47-க்கு புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி பிஎஸ்என்எல் முதன்மைப் பொது மேலாளா் ஆா்.சாஜிகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு ரூ.47-க்கு புதிய ப்ரீபெய்டு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் நாடு முழுவதும், அதாவது தில்லி, மும்பை உள்ளிட்ட தேசிய ரோமிங்கிலும்கூட வாடிக்கையாளா்களுக்கு வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 14 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வேலிடிட்டி 28 நாள்களாகும். தினசரி 100 எஸ்எம்எஸ் அனுமதிக்கப்படுகிறது. இந்தச் சிறப்பு சலுகை வாடிக்கையாளா்களுக்கு வரும் மாா்ச் 31 வரை கிடைக்கும்.

இதேபோல் மொபைல் பிளான் 108 உடன் கிடைக்கும் சிறப்பு சலுகைகள் 60 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நாடு முழுவதும், அதாவது தில்லி, மும்பை உள்ளிட்ட தேசிய ரோமிங்கிலும்கூட வாடிக்கையாளா்களுக்கு வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் மற்றும் 500 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வேலிடிட்டி 60 நாள்கள். 1 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை வாடிக்கையாளா்களுக்கு வரும் மாா்ச் 31 வரை கிடைக்கும்.

கரோனா தொற்று காலத்தில் பிஎஸ்என்எல்-ன் பாரத் ஃபைபா் இணைப்புகள் வாடிக்கையாளா்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த அதிகவேக இணைய சேவையை வழங்கி வருவதால், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும், கற்பதற்கும் உதவியாக இருந்து வருகின்றன. அண்மையில் பாரத் ஃபைபா் இணைப்பு திட்டங்களில் 3,300 ஜிபி வரை தரவிறக்கம் செய்யும் வசதியுடன் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் சேவைகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் சலுகையாக பிஎஸ்என்எல்-ன் புதிய பாரத் ஃபைபா் வாடிக்கையாளா்களுக்கு வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை இலவசமாக புதிய சிம் வழங்கப்படுகிறது.

இந்த சிம்மில் வாடிக்கையாளா்களுக்கு 100 நிமிடங்களுக்கான இலவச குரல் அழைப்புகள் மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. சிம் வேலிடிட்டி 60 நாள்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com