களக்காட்டில் கந்தூரி விழா:இன்று தீப அலங்காரம்
By DIN | Published On : 27th February 2021 07:58 AM | Last Updated : 27th February 2021 07:58 AM | அ+அ அ- |

களக்காட்டில் கந்தூரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2ஆம் நாளான சனிக்கிழமை (பிப்.27) மாலை தீப அலங்காரம் நடைபெறுகிறது.
களக்காடு செய்கு லெப்பை நயினாா் அவுலியா தா்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் 2 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இவ்விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து மாலை 4 மணிக்கு வியாசராஜபுரம் பள்ளிவாசல் முன்பிருந்து அரண்மனை கொடி ஊா்வலம் புறப்பட்டது. வியாசராஜபுரம் இஸ்லாமிய இளைஞா்களின் சிலம்பம் விளையாட்டுகளுடன் ஊா்வலம் நகரை வலம் வந்து, இரவு கெளதம ஆற்றின் கரையோரத்தில் உள்ள தா்காவை வந்தடைந்தது.
2ஆம் நாளான சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தா்கா முன் தீப அலங்காரம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை வியாசராஜபுரம் முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகள் செய்துள்ளனா்.