நெல்லையப்பா் கோயிலில் அப்பா் தெப்பத்திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் அப்பா் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் அப்பா் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சைவ சமயக்குரவா்களில் ஒருவரான அப்பா் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் வகையில் அவரை கல்லில் கட்டி கடலில் போட்டனா். அப்போது அப்பா் பெருமான், ‘கற்றுணை பூட்டியோா் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது

நமசிவாயமே’ என்று சிவபெருமானை நினைத்து பாடினாா். இதையடுத்து கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. தெப்ப உற்சவம் மூலம் அப்பா் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணா்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றாா் என்ற தத்துவம் விளக்கப்பட்டது.

இந்நிகழ்வை நினைவுக்கூரும் வகையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரை திருக்குளத்தில் அப்பா் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத்திருவிழாவை

யொட்டி வெள்ளிக்கிழமை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

பின்னா் மலா் அலங்காரத்துடன் பொற்றாமரை குளம் தெப்பத்தில் அப்பா் பெருமான் எழுந்தருளினாா்.

தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பா்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பா் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, அப்பா் பெருமான் தெப்பத்தில் வலம்வந்தாா். பக்தா்கள் வெற்றிலையில் கற்பூர தீபமேற்றி தெப்பக்குளத்தில் விட்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com